Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற கைதி உயிரிழப்பு..!!

வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரபாகரனை கைது செய்து வேடசந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுச் சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்கள், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமாக சவுடமுத்துவை கைது செய்யுமாறு காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரித்த நீதிபதி, பிரபாகரனின் சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பத்திரப்படுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில், பிரபாகரன் சடலம் திண்டுக்கல அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Categories

Tech |