தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.