இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது, “ஏற்றுமதியாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பெற்ற வாட் உள்ளிட்ட அனைத்து விதமான வரியும், அவரவர் கணக்குகளுக்குத் திருப்பிச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வேலையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன” என்றார்.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுமதி வீதிகம் 1.8 ஆக குறைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன