மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் எரிக்காடு பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.