குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னமல்லிபட்டி கிராமத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி, உதவி பொறியாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் செல்வகுமார், நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.எல். ஏ. கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளார்.