தொழில் துறையை முன்னேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தொழில் துறைக்கு 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு
தொழில் துறை பட்ஜெட்டின் சிறப்பம்சம்கள்
-
தொழில் வளர்ச்சி நிறுவனங்களை ஊக்குவிக்க 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
-
அரசு – தனியார் பங்களிப்புடன் ஐந்து நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மேம்படுத்தப்படும்
-
இந்தியாவில் செல்போன் உற்பத்தியை ஊக்கப்படுத்த திட்டம் வகுக்கப்படும்
-
தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்க தனித்துவமான அமைப்பு ஏற்படுத்தப்படும்
-
தேசிய ஜவுளித் திட்டத்திற்கு 1,480 கோடி நிதி ஒதுக்கீடு
-
உள்நாட்டில் மின்னணு பொருள்களை ஊக்கப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும்
-
சென்னை-பெங்களூரு இடையே தொழில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்
-
2000 கி.மீ. – நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
-
2024ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்
-
2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்
-
2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 100 விமான நிலையங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது