தீ விபத்து ஏற்பட்டதில் 12 குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் 20-வது தெருவில் இருக்கும் குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 12 குடிசைகள் எரிந்து நாசமானது.
இதனையடுத்து பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.