காளை மாடு முட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்ணவேளாம்பட்டியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிட்டுபிள்ளை(60) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம்போல சிட்டுபிள்ளை ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை எதிர்பாராதவிதமாக மூதாட்டியை முட்டியது.
இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிட்டுபிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.