தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங் கப்படும். மேலும் இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.