நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலை ரயிலில் பயணிப்பதற்கு நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆசைப்படுவார்கள். பல் சக்கரங்களின் உதவியோடு இயங்கும் இந்த ரயிலில் தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாளாவது பயணிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்து, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்வது சுற்றுலா பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மலை ரயில் மலைப்பாதையில் இயங்க பிரேக்ஸ் மென் பணி மிக முக்கியமானது.
இதுநாள் வரை இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர் இந்நிலையில் முதல்முறையாக குன்னுரை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க சிவஜோதி என்ற பெண் இந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் எட்டு வருடங்களாக கெரெஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது உதகை குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பிரேக்ஸ் உமென் பணியைத் தொடங்கி உள்ளார். இதனால் மலை ரயிலில் முதன்முறையாகப் பெண் ஒருவரை தெற்கு ரயில்வே பணியமர்த்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.