Categories
மாநில செய்திகள்

ரொம்ப நல்லது…! இந்த ரேஷன் கடைகளில் “இனி இதுவும்”…. மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்தில் இரண்டு கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நீலகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் அரிசிக்கு பதிலாக மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் முன்னோடித் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |