Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி…. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோகன் ராஜ் என்பவர் போலி கன்சல்டன்ஸி நடத்தி,அதன் மூலமாக ஆவின் உள்ளிட்டவற்றில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அசல் கல்விச் சான்றிதழை பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக தனசேகரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த, இதனைப் போலவே பலரிடம் தலா 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த மோகன்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி போல் நடித்த புருஷோத்தமன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வெளிநாட்டில் பணம் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஏஞ்சல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் சுமார் 100 பேரிடம் மொத்தம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |