Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக கணினி வழித் தேர்வை(மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி) நாளை நடத்துகின்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.மேலும் இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்த நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினி திரையில் தோன்றும். தேர்வின் தொடக்கத்தில் 180 நிமிடங்கள் காண்பிக்கப்படும்.

அது படிப்படியாக குறைந்து பூஜ்ஜியத்தை அடையும் போது தேர்வு தானாக முடிவடைந்துவிடும். தேர்வு கணினி அமைப்பால் தானாக சமர்ப்பிக்கப்படும்.  அதில் வினாக்கள் ஏறுமுக வரிசைபடி ஒவ்வொன்றாக கணினி திரையில் தோன்றும்.ஒரு வினாவுக்கான விடையை தேர்வு செய்ய அதற்கென அளிக்கப்பட்ட விடை தெரிவுகளில் ஒன்றின் மீது கிளிக் செய்தவுடன், அதனை சேமிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உங்களது விடைகள் சேமிக்க படாது என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |