Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சூப்பரோ சூப்பர்” தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசுப்பள்ளி…. ஆசியருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்கள் கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது ஆகும். தமிழக அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தொடுதிரை, ஸ்மார்ட்போன் மூலம் பாடம் எடுப்பது, 3டி ஷோ, பப்பட் ஷோ என தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய முறையில் கல்வியை தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் என்பவர் கற்றுக்கொடுக்கிறார். நோட்டு புத்தகங்கள் இல்லாத இந்த செயல்முறை கல்வியை மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருவதாக ஆசிரியர் நெல்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார் இவருக்கு பலவிதமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |