இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் கூறியதாவது :
ஆண்டிற்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நபர்களுக்கு இனி வருமானவரி கிடையாது. அதேபோன்று, ரூ.7.5-10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதமும், ரூ.10 – 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் வருமானவரி வசூலிக்கப்படும்.
அதேபோன்று, ரூ.12.5 -15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 25 சதவீதமும், 15 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுவபவர்களுக்கு 30 சதவீதம் வருமானவரியும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்