அக்னிபத் திட்டம் குறித்த முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணம் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறவில்லை என்றார். இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் நல்லதொரு வாய்ப்பு இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மூலமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு தற்போது 21 லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இளைஞர்களின் நலனுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
எனவே அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றார். இதனையடுத்து அமைச்சர், வின்டர் ஸ்போட்ஸின் நிர்வாக குழு, ஜவகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்ட்டெய்னரிங் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய அமைச்சர், மலை ஏற்றம் என்பது மன உறுதியையும், தைரியத்தையும் வளர்க்கிறது என்றார். அதன்பிறகு மலையேற்றத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், தற்போது பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொள்வது பாராட்டுக்குரிய ஒரு விஷயமாகும் எனவும் கூறினார்.