ஐரோப்பிய மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக பெல்ஜியத்தில் மாம்பழத்திருவிழா தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா உலகநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடாக திகழ்கிறது. எனினும் அதிகமான மாம்பழங்கள் மத்திய கிழக்கு நாடுகளைத் தான் சென்றடைகின்றன. ஐரோப்பிய யூனியன், லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு உரிய இந்திய தூதரான சந்தோஷ் ஜா, இந்திய நாட்டின் மாம்பழங்களுக்கு ஐரோப்பியாவில் பெருமளவில் சந்தை மதிப்பு இருக்கிறது என்று கூறினார்.
இந்திய தூதரகத்தினுடைய கடல்சார், வேளாண்மை பொருட்களுக்கான ஆலோசகராக இருக்கும் மருத்துவர் ஸ்மிதா சிரோஹி தெரிவித்ததாவது, பெல்ஜியம் நாட்டிற்கு, லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மாம்பழங்கள் பெருமளவில் கொண்டுவரப்படுகின்றன. அங்கு ஐரோப்பிய சந்தையில் இந்திய மாம்பழங்களை காட்சிப்படுத்துவதற்காக மாம்பழத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாம்பழத் திருவிழாவானது, ஐரோப்பாவில் இந்திய நாட்டின் மாம்பழங்களுக்கு சந்தை ஏற்படுத்தவும், அந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கவும், தொடங்கப்பட்டிருக்கிறது.