Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில்….. “ஓராண்டு சுழற்சிமுறையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்”…..  ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு…..!!!!

சமவெளிப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மலைப்பகுதி அதிகம் உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மலைப்பாங்கான இடங்களில் தொடர் கல்வி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் மலைப்பகுதியில் பணிபுரிய தயங்குவதால் குறைந்தது ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மலைப்பகுதிகளில் பணியாற்றுவது முழுமை பெறும் வரை மலைப்பகுதியில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும்,  இதில் அனைவரும் மலைப்பகுதியில் பணியாற்ற கட்டாயமாக்கப் படுவார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிஉயர்வு பணியிடங்களில் காலி இடங்களை முதலில் மலைப்பகுதிக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |