Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு”… பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!!

அமெரிக்க நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே அந்த நாட்டில் அலபாமா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வெஸ்டாவியா ஹில்ஸ் நகரிலுள்ள செயின்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் மத வழிபாட்டு தளத்தில் நேற்று உணவு விருந்து நடைபெற்ற போது துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அலபாமா துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |