இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எப்போதும் மாணவர்களுக்கு ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் அதற்கும் முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கு அது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் தான் நடைபெறும். ஆசிரியர் பயிற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செல்போன் செயலிகள் பயன்பாடு ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். ஆசிரியர் பயிற்சிக்கு என்று தனி டிவி சேனல் தொடங்க வேண்டும். அத்தோடு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.