Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூதாட்டத்தில் பறிபோன 20 லட்ச ரூபாய் பணம்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பிரணவ், பிரதாப் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜன் தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டம் விளையாடியுள்ளார். ஆனால்  நாகராஜன் 20 லட்ச ரூபாய் வரை சூதாட்டத்தில் இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் நாகராஜனை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நாகராஜனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |