Categories
மாநில செய்திகள்

இளசுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தாத்தா…. அப்படி என்ன பண்ணாங்க?… இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி அருகில் காரியாண்டி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி தாத்தா வயது(90). இவருடைய மனைவி வேலம்மாள் ஆவார். இதில் துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனைமரம் ஏற கற்றுள்ளார். இதையடுத்து தாத்தா இளம் வயதில் அதையே முழுநேர தொழிலாக வைத்துள்ளார். அதன்பின் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, அங்கேயும் பனைமரம் ஏறும் வேலைபார்த்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்கு பின் சொந்த ஊரான காரியாண்டியில் அவர் குடியேறி விட்டார். இப்போது 90 வயதை கடந்த துரைப்பாண்டி தாத்தாவை அவரது மகன் கவனிப்பதில்லை என கூறப்படுகிறது.

முதுமை துரத்தவே கடைசிக் காலத்தில் மகனின் அரவணைப்பில் வாழலாம் என்று நினைத்த துரைப்பாண்டி தாத்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் தன் ஆசை மனைவி வேலம்மாளை பட்டினிபோட மனமில்லாத துரைப்பாண்டி தாத்தா மீண்டும் பனைஏறும் தொழிலில் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். உழைப்புக்கு வயது தடையில்லை என்பதை நன்குஉணர்ந்த துரைப்பாண்டி தாத்தா, இப்போது வரை யாரிடமும் கையேந்தாமல் பனை ஏறி பதநீர் எடுத்தும், நொங்கு வெட்டியும் தன் பொருளாதார தேவையை போக்கி கொள்கிறார். இதற்காக தினசரி அதிகாலை எழுந்து கையில் அரிவாளுடன் பனை ஏற போகிறார். இளம்வயதில் நாளொன்றுக்கு 30 மரம் ஏறும் அளவுக்கு உடல் ஒத்துழைத்துள்ளது. ஆனால் இப்போது பத்துக்கும் குறைவான மரங்களில் மட்டும் ஏறி மிகசிறிய வருமானத்தை கொண்டு மனைவியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் துரைப்பாண்டி தாத்தாவுக்கு வயோதிகம் காரணமாக குறுக்கெலும்பில் கூன் விழுந்துள்ளது.

இருப்பினும் உடல் இந்த காலத்துக்கு இளசுகளுக்கு முன் உதாரணமாக 90 வயதிலும் உழைத்து சாப்பிடுகிறார். வீட்டின் மாடிப்படி ஏறவே மேல் மூச்சும், கீழ் மூச்சும் படாதபாடுபடும் இந்த காலத்து இளைஞர்களுக்கு மத்தியில் துரைப்பாண்டி தாத்தா தன் 90 வயதில் சவால் மிகுந்த தொழிலான பனைஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூன்விழுந்த முதுகோடு பிறர் முகத்தை நிமிர்ந்துபார்க்க முடியாதவர் விண்ணை நோக்கி எட்டி செல்லும் பனை மரத்தில் சர்வ சாதாரணமாக  ஏறுகிறார். இது தொடர்பாக துரைப்பாண்டி தாத்தா கூறியதாவது, “12 வயதில் பனை மரம் ஏற கற்றுகொண்டேன். என் தாத்தா தான் எனக்கு கற்றுகொடுத்தார். மும்பையில் 10 வருடம் மரம் ஏறினேன். இதனிடையில் என் மகன் மதுவுக்கு அடிமையாகி விட்டான். இதனால் வீட்டில் கஷ்டம் நிலவியதால், எனக்கு தெரிந்த தொழிலை செய்து புழைப்பை ஓட்டுகிறேன். அத்துடன்  எனக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும் எனது மனைவிக்கும் ஓய்வூதியம் கொடுத்தார்கள் என்றால், அதை வைத்து மீதி காலத்தை ஓட்டிடுவோம்” என்று கூறினார்

Categories

Tech |