Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மின்னணு கழிவுகள் மற்றும் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்தல்”…. காங்கயத்தில் விழிப்புணர்வு….!!!!!

மின்னணு கழிவுகள் மற்றும் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்தல் பற்றி நேற்று காங்கயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து நகர குடியிருப்புகளில் இருந்து மின்னணு கழிவுகள் மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய மற்ற கழிவுகள் சேகரித்து, அதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மறுசுழற்சி செய்வதற்கான பொருட்களைப் பெற்றுக்கொண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 12 வீதம் வழங்கப்படும் திட்டம் நேற்று காங்கயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மேலும் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ் ஆரம்பித்து வைத்தார். மேலும் காங்கயம் 1வது வார்டு திருவிக நகரில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |