பல ஆண்டுகளாக பெண் தேடி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ்வாணன்(32) என்பவர் ஒரு புரோக்கர் மூலமாக பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் முதல் இரவு அன்று பூஜா தமிழ்வாணனிடம் குடிக்க மது கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன மாப்பிள்ளை அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் தாம்பத்தியத்திற்கு அந்த பெண் தடை போட்டது மட்டுமல்லாமல் காலையில் பணம், நகைகளுடன் தப்பிவிட்டதை அறிந்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தமிழ்வாணன். மேலும் மாப்பிள்ளைக்கு வயது அதிகம் என்று கூறி அவரிடம் அந்த பெண் வீட்டார் 1.35 லட்சத்தையும் வாங்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.