கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நிகழ்ந்துள்ளது. நாம் பெரும்பாலும் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதுவே தற்போது மிகவும் அரிதாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வான ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டை குழந்தைகள் என நான்கு குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி நேர்ஸ்.
7 கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது. தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். அவரது கருப்பையில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் வளர்ந்து வருகிறது என்று ஆஷ்லின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.