சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திம்பம் மலைப் பாதையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் சரக்கு வேனை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர்.