மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.