தமிழகத்தில் சமீப நாட்களாகவே கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3073 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 596 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கண்டறிய வேண்டும். பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.