அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் பிபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு சென்று வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் செய்தியாளர்கள், தலைமைக்கு என்ன கேள்வி வைக்க விரும்புகிறீர்கள்.? யாருக்கு உங்கள் ஆதரவு என்று கேட்கும்போது கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் தலைவரே.! நீங்க என்ன கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன் என பத்திரிகையாளர் ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.