தமிழ்நாட்டில் கடந்த 2 வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளோருக்கு பாரசிட்டமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்படவேண்டும். மேலும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.