மத்திய பட்ஜெட்டுக்கு 10க்கு 1 மதிப்பெண் வழங்குவேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில் , முக்கிய நதிநீர் பிரச்சனைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை. எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு விவாதத்துக்குரியது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10க்கு 1 மதிப்பெண் வழங்குவேன். பொருளாதாரத்தை மோடி அரசு கைவிட்டதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.