Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.61.13கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் உரம் முழு மானியத்தில் 1.90 லட்சம் ஏக்கருக்கு தரப்படும். குறுவை சாகுபடிக்கு 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |