Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களே…. 12 பரோட்டா சாப்பிட்டா போதும்…. அசத்தலான ஆஃபர்….. உடனே கிளம்புங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காளான் வகைகள் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் மாலை நேர உணவகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதன் தொடக்க விழா நடந்தது. அப்போதிலிருந்து அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த கடை விளங்குகிறது. அந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடந்து முடிந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் ஒன்றை உணவகம் வெளியிட்டுள்ளது . அதாவது ஒரு நபர் 12 கோதுமை பரோட்டா சாப்பிட்டால் பணம் செலுத்த தேவையில்லை.

அப்படித் தவறும் பட்சத்தில் பணம் செலுத்தினால் போதும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பலரும் அந்த உணவகத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்கின்றனர். இதில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். சிலர் முயற்சி அடைந்து தோல்வி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது . அதனால் ஒரு முறையாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வரும் ஒரு ஆள் அந்த உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

Categories

Tech |