Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் – TTV தினகரன்.

வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று மத்திய பட்ஜெட் குறித்து TTV தினகரன் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV.தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் , பொருளாதார மீட்பு , வேலைவாய்ப்புக்கான உறுதியான அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது. விவசாயத்திற்கான 16 அம்ச திட்டம் உள்ளிட்ட ஒன்றிரண்டு வரவேற்க்கத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்,வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது,எல்.ஐ.சியைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் கவலையளிக்கின்றன. என்று TTV தெரிவித்தார்.

Categories

Tech |