Categories
மாநில செய்திகள்

அக்னிபாதை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் போராட்டம்?…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்….!!!!

நாடு முழுதும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. அதேசமயம் பல மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. இதேபோன்று நேற்று சென்னையிலும் தலைமைச் செயலகம் அருகில் அரணி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இளைஞர்கள் மெரினாவில் கூடி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து மெரினா, தலைமைச்செயலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நேப்பியார் பாலத்திலிருந்து ரிசர்வ் வங்கி அருகிலுள்ள பாலம்வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கொடிமரம் இல்லம் சாலையிலிருந்து தலைமைச் செயலகம் போகும் சாலைவரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது நாளாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |