செக் குடியரசில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த வாழைப்பழ பெட்டிக்குள் 840 கிலோ அளவில் போதை பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக் குடியரசில் இருக்கும் ஜிசின் மற்றும் ரிஷொனொவ் நட் ஹ்கினுவ் என்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறது. அங்கு சில வாழை பெட்டிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது. எனவே, அந்த கடையின் பணியாளர்கள் பெட்டியை திறந்து பார்த்த போது, அதனுள் பல வண்ணங்களில் பார்சல்கள் இருந்துள்ளது. உடனே அதனை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கொக்கைன் போதை பொருள் கிலோ கணக்கில் இருந்தது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு விரைந்து வந்த காவல்துறையினர் வாழைப்பழ பெட்டிக்குள் இருந்த போதைப்பொருட்களை கைப்பற்றினர். அதில் மொத்தமாக சுமார் 840 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 5 ஆயிரம் கோடி என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
எந்த நாட்டிலிருந்து அந்த வாழைப்பழ பெட்டிகள் வந்திருக்கின்றன? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தவறுதலாக இடத்தை மாற்றி, போதைப்பொருள் கும்பல் பல்பொருள் அங்காடிக்கு அனுப்பியிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.