Categories
தேசிய செய்திகள்

போலியோ தடுப்பூசி தினத்தை முன்னிட்டு…. 11 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலியோ துணை தடுப்பூசி தேசிய தினம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு  மருந்து வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சண்டிகர், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் உலகில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இன்றளவும் போலியோ பரவி வரும் நிலையில், இந்தியா போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழை கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா போலியோ இல்லாத நாடாக இருந்தாலும் கூட, குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |