இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய கொரானா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்திருக்கிறது. தரவு பகுப்பாய்வு நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதம் தரவை ஒழுங்குமுறை முறை நிறுவனத்திடம் சமர்ப்பிப்போம். எல்லாம் சரியாக இருந்தால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.