Categories
மாநில செய்திகள்

“ஓட்டை உடைசலான அரசு பேருந்து”… மெய்சிலிர்க்க வைக்கும் 4 ம் வகுப்பு மாணவியின் கடிதம்….!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜெய் மிருத்திகா என்னும் மாணவி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ராணி தோட்டம் டிப்போ பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில் வழித்தடம் 36 n என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் சுமார் 6இன்ச்  முதல் 8இன்ச்  வரை ஓட்டை இருக்கின்றது. காலை மற்றும் மாலை வேளைகளில் சிறு குழந்தைகள் செல்வதற்கு அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதனால் இது போன்று பழுதுகள் இருந்தால் அசம்பாவிதம் ஏதாவது நேரிடக் கூடும்.

அதற்கு முன்னதாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த கடிதத்தை 16.06.2022 5 எழுதியிருக்கின்றார். பிஞ்சு குழந்தையின் மொழிநடை மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. அவரது சமூக அக்கறை பலரும் வியந்து பாராட்ட கூடியதாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நான்காம் வகுப்பு மாணவியின் கடிதத்தை அப்படியே படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். மேலும் அரசு பேருந்துகள் சாமானியர்களும் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்து அதில் குறைகள் அற்ற நிலை இருந்தால் தான் அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

அதை விட்டுவிட்டு இப்படி ஓட்டை உடைசல் ஆக இருந்தால் ஆபத்து ஏற்பட தான் செய்யும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் மழைக்காலங்களில் குடை பிடித்துக்கொண்டு பயணிகள் பயணிக்கும் விதமான நிகழ்வுகளையும் பார்க்கமுடிகின்றது. இப்படியான நிலைமையை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வரும் தமிழக அரசு அதை தரமானதாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இது தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |