நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் திட்டத்தை மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் நிதி உதவி போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் ரேஷன் கார்டு மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 முதல் 30 ஆம் தேதி வரை இலவச ரேஷன் விநியோகிக்கப்படும். ஆனால் இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும். அதாவது இந்த முறை இலவச ரேசன் திட்டத்தின் கீழ் கோதுமை வழங்கப்படாது.
அதனைதொடர்ந்து இலவச திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஆனால் உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவின்படி, பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட உள்ளது. உத்தரபிரதேச அரசுடன் சேர்ந்து பல மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைக்க அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் ஆதார் அங்கீகாரம் மூலம் உணவு தானியங்களை வாங்க முடியாத தகுதியுள்ள நபர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி மொபைல் OTP சரிபார்ப்பு மூலம் அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட நோடல் அலுவலர்கள் விநியோகத்தின் போது வெளிப்படைத் தன்மைக்காக அனைத்து கடைகளில் இருப்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் கோதுமை கொள்முதல் குறைந்துள்ளதால் ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவு குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.