Categories
தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு …..!!

டெல்லி ஷாகின் பாக்  பகுதியில் CAA போராட்டம் நடைபெற்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் மிக அருகிலேயே உள்ள ஷாகின் பாக் பகுதியிலும் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் திடீரென்று கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் போராட்டக்காரர்களை நோக்கி நாட்டு துப்பாக்கியை கொண்டு சூட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இது மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்புதான் இதே பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே ஜாமியான பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சூழ்நிலையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இரண்டாவது முறையாக , ஒரு நாள் இடைவெளியில் அடுத்து ஒரு துப்பாக்கி சூடு நிகழ்ந்திருக்கிறது. இந்த பகுதியில் கடந்த 48 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றத்தை அணுகிய போது நீதிபதிகள் போராட்டக்காரர்கள் அமைதியாக இருக்கிறார்கள் . எனவே எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார்கள். மேலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. டெல்லி தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழலில் இந்த சம்பவம் அங்கு பரபரப்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கபில் குஜ்ஜார் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |