Categories
சினிமா

“விஜய் பாபு மீதான பாலியல் குற்றச்சாட்டு”…. ரூ.1 கோடி பேரம் பேசுறாரு…. நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய்பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சூழ்நிலையில், விஜய்பாபு தலைமறைவானார். அத்துடன் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாமீன்கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து துபாயிலிருந்து கேரளா திரும்பிய விஜய் பாபு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் பல தகவல்களை அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் வழக்கை திரும்ப பெறும்படி விஜய் பாபு தன் நண்பர்கள் வாயிலாக பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “விஜய் பாபு தன் தொடர்புகளைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் கணிசமான தொகையை வழங்குவதன் வாயிலாக செல்வாக்கு செலுத்தியுள்ளார். மேலும் தன் மீதான புகாரை திரும்ப பெற்றால் ரூபாய் 1 கோடி தருவதாக நண்பர் வாயிலாக என்னிடம் விஜய்பாபு உறுதி அளித்தார். இது தொடர்பா நான் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் அச்சம் மற்றும் சட்டத்தடைகளைக் கடந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். தனக்குச் செய்த காரியங்களுக்காக அவரை நீதியின் முன்நிறுத்தத் தயாராக இருந்தேன். விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதைத் தெளிவாக அறிந்து புகார் அளித்தேன். இதனிடையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

விஜய் பாபுவிடமிருந்து விலக்கிக்கொள்ள முயன்றபோதும், அவர் தொடர்ந்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்தார். அத்துடன் புகாரளிக்க வேண்டாம் என்று என் முன் கெஞ்சினார். எவ்விதமான சமரசத்திற்கும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். என் புகார் உண்மையாக இல்லையெனில் அவரது வாய்ப்பை நான் ஒப்புக்கொள்வது நல்லது அல்லவா..? நான் பிளாக் மெயில் செய்வதாக அவர் சொல்வது உண்மை இல்லை. எங்களுக்கு இடையில் எவ்விதமான பணப் பரிமாற்றமும் கிடையாது. ஆகவே நீதியைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |