பிப்.4 இல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்
மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இதில் எல்.ஐ.சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படுமென்ற அறிவிப்பும் வெளியாகியது. இதற்க்கு LIC ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டமும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து LIC சங்கம் தெரிவித்ததால் LIC-யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக பிப்.4ல் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஸ்டரைக் நாடு தழுவிய 1 மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளில் 1,000 கோடி மட்டுமே அன்னிய முதலீடு இன்சூரன்ஸ் துறையில் வந்துள்ளது.கூட்டமைப்பு LIC ஓராண்டிற்கு தரும் 3.50 லட்சம் கோடி எங்கே ? இவர்கள் கொண்டுவந்த முதலீடுகள் எங்கே ? எந்த ஒரு தரவுமின்றி LICயை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது மக்கள் விரோத செயல் என கண்டனத்துக்குரியது.