கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர் பெண் மீது நெருப்பு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர், பெண் ஒருவர் மீது திடீரென்று ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த நபர் நெருப்பு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவத்திற்கு பின் அந்த பாதையில் செல்லும் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.