Categories
மாநில செய்திகள்

“நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம்”…..  தீவிரமாக நடைபெறும் ஏற்பாடுகள்…..!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமானது நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆனித் திருவிழாவையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. ஆனிப் பெருந்திருவிழாயொட்டி வருகிற 3-ந்தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திவிரமாக நடந்து வருகிறது. சுவாமி, அம்மன் தேரை சுற்றி கண்ணாடி கூண்டுகள் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் கீழரத வீதியில் காந்திமதி அம்மன் தேர் நிற்கும் இடத்தில் உள்ள கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது.

Categories

Tech |