நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கை டெல்லி நீதிமன்றம் வயநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்தது.
4 குற்றவாளிகளில் 32 வயதான முகேஷ் குமார் சிங் தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்ட கோரிய மனுவை ஜனாதிபதி கடந்த 17ஆம் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ததோடு , ஜனாதிபதி நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரிய வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தண்டனையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனிடையே மற்றொரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய நிலையில் அதனையும் குடியரசு தலைவர் நிராகரித்தை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் புதிய மனு டெல்லியில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் 4 பேரையும் வெவ்வேறு தேதிகளில் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட வேண்டுமென்றும், 4 குற்றவாளிகளையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை என்று திகார் சிறை நிர்வாகம் அந்த மனுவில் கூறி இருந்தது. இந்த மனு அவசர வழக்காக எடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தது.
இந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , இவர்களுக்கு தண்டனையை அறிவிக்க வேண்டும் , தாங்கள் செய்த கொடூர குற்றத்திற்கான தண்டனை கிடைக்காது என குற்றவாளிகள் நம்புகிறார்கள் என்று தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகள் பதிலளிக்க உத்தரவிட்டு நாளை ஒத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.