Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப்-2ஏ முறைகேடு – அரசு ஊழியர்கள் கைது …!!

குரூப் – 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் , குரூப் -2ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில் 2 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. இது தொடர்பாக காவலர் சித்தாண்டி சகோதரரும் , காரைக்குடி பதிவாளர் அலுவலக உதவியாளருமான வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக ஜெயராணி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி நெல்லை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார்.அண்ணன் சித்தாண்டி மூலம் முறைகேடு செய்து 285 மதிப்பெண் பெற்று 8ஆவது இடத்தில் வேல்முருகன் தேர்ச்சி பெற்றுள்ளார். முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் , சித்தாண்டியை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |