அக்னிபாத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு குறித்து பாதுகாப்புத்துறை சார்பில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, இந்திய ராணுவத்தில் ஒழுக்கம்தான் அடித்தளம் என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவைப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார்.
ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை என்ற சான்றிதழ் தேவை என்றும், இது தொடர்பாக காவல்துறை முழு அளவில் விசாரணை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.