பொறியியல் படிப்புகளில் இளநிலை வகுப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூலை 22-இல் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் https:/www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.