Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…, திடீரென நடந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடியில் இருந்து  தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  நேற்று லோகு என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து  தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாவித்திரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |